சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.
அதன் அடிப்படையில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம் என்ற கருத்தை நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல நீதித்துறை நடுவரின் அறிக்கையில் குறிப்பிட்டபடி சாட்சியமளித்த காவலருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.