Categories
மாநில செய்திகள்

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு – டிஜிபி சைலேந்திரபாபு!!

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பியுள்ளார். அதில், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும். ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும், ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |