தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறி வெளியில் வரும் மக்களை கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்களின் பணி இன்றியமையாதது. கொரோனா பரவல் காலத்திலும் கடுமையாக உழைக்கும் காவலர்களுக்கு விடுமுறை என்பது அரிது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் களபணியாற்றும் காவலர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவலர்களுக்கு தலா 5000 வழங்கியதற்காக சுமார் ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆம் நிலை காவலர் முதல் காவல் ஆணையர் வரையிலான அனைவருக்கும் கொரோனா நிதி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.