Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காளானை இந்த பிரச்சனை இருப்பவர்கள் தயவுசெய்து சாப்பிடாதீங்க… ரொம்ப ஆபத்து..!!

பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது  நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும்.

ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். உபயோகப்படுத்தி விட்டு மீதியை மறுநாள் பயன்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது. அதனை நன்றாக மூடி வைக்க வேண்டும். இருக்கமான டப்பாவில் போட்டு மூடி வைத்தால் மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால் பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் தாய்மார்கள் காளானை தவிர்ப்பது மிகவும் நல்லது . பியூரின் சத்து அதிகமாக இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். காளானை நன்றாக சமைத்து இரவு உணவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. சத்தான பொருளாக இருந்தாலும் அனைவரும் சாப்பிட முடியாது. சில சரும அலர்ஜி பிரச்சினை இருப்பவர்கள் இதை அடியோடு ஒதுக்கிவிட வேண்டும். சாப்பிட்டால் சருமத்தில் தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

Categories

Tech |