உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி ஒன்றில் அதனுடைய வளாகம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குள் நுழைய செய்துள்ள காரியம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தனது கால்கள் மழைநீரில் படக்கூடாது என்பதற்காக அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்து வரிசையாக நாற்காலிகளை போட வைத்து அதன் மேல் ஏறி செல்கிறார். ஆசிரியர் கீழே விழாமல் இருப்பதற்காக பள்ளி மாணவர்கள் முழங்கால் வரை நீரில் நின்று நாற்காலியையும், ஆசியையும் பிடித்துக் கொள்கிறார்கள். இந்த சம்பவம் உடன்பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரும் ஆசிரியர் செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
#WATCH उत्तर प्रदेश: मथुरा ज़िले के अंतर्गत प्राथमिक विद्यालय दघेंटा का एक वीडियो वायरल हुआ है, जिसमें अध्यापिका छात्रों से कुर्सियों का पुल बनवाकर जलभराव को पार कर रही हैं। वीडियो वायरल होने के बाद अध्यापिका को निलंबित किया गया है। (28.07) pic.twitter.com/bw8ZqPaNrF
— ANI_HindiNews (@AHindinews) July 29, 2022