இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, கொல்கத்தா, சென்னை, மும்பை உட்பட 10 நகரங்களில் நடைபெறும்.
ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தலினால் கோவாவில் மட்டும் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எம்.சி அதெலடிக். ஜவர்கலால் நேரு, திலக் ஆகிய மூன்று மைதானங்களில் வைத்து இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது. நாளை முதல் தொடங்க இருக்கும் இந்தப் போட்டி பிப்ரவரி மாதம் வரை நடைபெற உள்ள நிலையில் கொரோனா தடுப்பு காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.