வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்ற நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து சிறப்பு படைகளை களம் இறக்கி கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறது. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கால்பந்து போட்டிக்கு சுமார் 1.2 பில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்த காவல்துறையினர் இணைந்த சிறப்பு படை ஒன்றை கட்டார் உருவாக்கியிருக்கிறது.
இதில் கலவரங்களை ஒடுக்குவதற்காக ட்ரான்ஸ் போலிசார் மற்றும் துருக்கியின் இரக்கமற்ற சிறப்பு படைகளும் இடம் பெற்றிருக்கிறது. பொதுவாக தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவே துருக்கியின் polis-ozel-harekat படை களமிறக்கப்படுவதும் உண்டு பகுதிகளில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவம் பற்றி polis-ozel-harekat கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும் இந்த படையினருக்கு பெண்கள் அணியும் தனியாக இருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 3000 சிறப்பு படையினர் கட்டாரில் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்புடைய சிறப்பு படைகள் கட்டாரில் முன்னெடுக்கும் எந்த விதமான நடவடிக்கைகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வாடகை கொலையாளிகளாக துருக்கியின் சிறப்பு படைகளை பயன்படுத்துவதை எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய், பயங்கரவாத தடுப்பு குழு மேலும் கால்பந்து விளையாட்டின் போது அத்து மீறுபவர்களை அடக்கும் சிறப்பு குழுவினர் என இதுவரை 191 பேர்கள் களமிறங்கி இருக்கின்றனர். மேலும் பயங்கரவாத தடுப்பு படையினர் 100 பேர், வெடிகுண்டு நிபுணர்கள் 50 பேர், மோப்ப நாய்கள் 80 மற்றும் கழகத்தின் போது பயன்படுத்தப்படும் நாய்கள் என துருக்கியும் கட்டாரிக்கு உதவி செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் கட்டார் போலீசார் 800 பேர்களுக்கு துருக்கி பயிற்சியும் அளித்திருக்கிறது. மேலும் இவர்களுடன் பாகிஸ்தான், தென்கொரியா, மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சிறப்பு படைகள் களமிறங்குகிறது.