கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய படிப்புகள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நினைவு பெற்றது. மேலும் இந்த படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகலை பதிவேற்றம் செய்யவும் வருகின்ற 6ஆம் தேதி காலை 8 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். மேலும் அயல்நாட்டு வாழ் இந்தியர், அயல்நாட்டு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாட்டு வாழ் இந்தியரின் நிதி ஆதாரம் பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபர் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.