தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தரவரிசை பட்டியலில் விவரங்கள் குறித்து மாணவர்கள் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.