Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 408 இடங்கள் உள்ளன. மேலும் உணவு கோழியின பால்வள தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் இருக்கின்றன.

தற்போது  பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று துவங்கியுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கால்நடை மருத்துவ படிப்பில் 29 இடங்களும், பிடெக் படிப்பில் 8 என 37 இடங்கள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவில் 40 இடங்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பிரிவில் உள்ள இரண்டு இடங்கள் என 42 இடங்களுக்கான கவுன்சிலிங் இன்று நடைபெற உள்ளது.

பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் www.tanuvas .ac .in, www2.tanuvas .ac .in ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. மேலும் 28-ஆம்  தேதி காலை 10 மணி முதல், மார்ச் மாதம்  3-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். இதற்கு பின்னர் தேர்வான மாணவர்களுக்கு  சேர்க்கை ஆணை மார்ச் 5-ஆம் தேதி  வெளியிடப்பட உள்ளது. அதை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 16-ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கு நேரடியாக சென்று சேர்ந்து கொள்ளலாம் என கால்நடை மருத்துவ பல்கலை தெரிவித்துள்ளது.

Categories

Tech |