Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 22 முதல் 24 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |