Categories
மாநில செய்திகள்

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிகளுக்கு 80 காலியிடங்கள் இருக்கிறது. இந்த பணிக்கு ஏப்ரல் 11 , 12 , 13‌‌ , 18 , 19 , 20 , 23 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. இந்த நேர்காணல் திருச்சி, பழைய கோழிப் பண்ணை வளாகம், புதுக்கோட்டை மெயின் ரோடு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நேர்காணலுக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கான அழைப்பிதழ் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த அழைப்பிதழ்கள் கிடைக்காத நபர்கள் www.trichirappalli.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் கால்நடைகளை நன்கு கையாள தெரிந்திருக்க வேண்டும். இதனையடுத்து சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் நேர்காணலுக்கான அழைப்பிதளில்  குறிப்பிடப்பட்டுள்ள மூலச் சான்றுகள், ஆதார் அட்டை அசல் ஆகியவற்ரை உடன் கொண்டு வர வேண்டும். மேலும் நேர்காணல் அழைப்பிதழ் இல்லாத நபர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Categories

Tech |