Categories
தேசிய செய்திகள்

காலை 7 மணி முதல்…நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது..!!

கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது.

நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த சுய ஊரடங்கு என்பது தொடங்கி இருக்கிறது. அவை கொரோனோவை முழுக்க முழுக்க ஒலிக்கக் கூடிய பொறுப்பு, கடமை  மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆகையினால் மக்கள் இணைந்து ஒன்றாக இந்த கொரோனோவை  ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அதற்காக  மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே வரலாம், மற்ற நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இந்த சுய ஊரடங்கு கடைபிடித்து வைரஸை அழிக்கும்  பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் 14 மணி நேரம் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோல் பல்வேறு சங்கங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் இந்த சுய ஊரடங்கு கடைபிடிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்கள். இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் பால், மருந்தகங்கள் மருத்துவமனை  போன்றவை எல்லாம் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் சுய  ஊரடங்கு மக்களால் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |