நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பலத்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் கடைக்கும் டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் விற்பனை நேரமும் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை என்று மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தற்போது பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இரவு 9 மணிக்கு பின் கணக்குகள் முடிக்க 10 மணி ஆகிவிடுகிறது. இரவு ஊரடங்கு என்பதால் வீட்டுக்கு திரும்ப சிரமம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.