கையில் காபி கப்புடன் நடிகை ராதிகா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா. இதையடுத்து இவர் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் படங்களில் மட்டுமல்லாது தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சித்தி, செல்லமே, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களை தயாரித்து நடித்து வந்தார். கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்து வந்த ராதிகா இனி சீரியல்களில் நடிக்க போவதில்லை என அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
Morning happiness pic.twitter.com/T4aa4PlkH0
— Radikaa Sarathkumar (@realradikaa) May 13, 2021
தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காலை மகிழ்ச்சி’ என பதிவிட்டு கையில் காபி கப்புடன் கண்களை மூடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.