Categories
மாநில செய்திகள்

காலை இழந்து…. உயிரையும் இழந்த கால்பந்து வீராங்கனை…. பெரும் சோகம்…!!!

சென்னை வியாசர்பாடியில் வசிப்பவர் ரவிக்குமார். இவருடைய மகள் பிரியா. 17 வயதான இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் படித்து வந்தார். மேலும் கால்பந்து போட்டியில் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றவர். இந்த நிலையில் வலதுகால் மூட்டு சவ்வில் இருந்த பிரச்னைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றார்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர் கண்காணிப்பில் இருந்த பிரியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Categories

Tech |