Categories
மாநில செய்திகள்

காலேஜ் கிரவுண்டில் நுழைந்த நாய்…. ஊழியர்களின் வெறிச்செயல்…. பதைபதைக்கும் காட்சிகள்….!!!!

கோவை மாவட்டம் சரவணம் பட்டி துடியலூர் போகும் சாலையில் இயங்கிவரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் தெரு நாய் ஒன்று நுழைந்துள்ளது. இதனால் கல்லூரி ஊழியர்கள் அதை விரட்டியுள்ளனர். அப்போது ஊழியர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற நாய் ஒரு புதரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையை வைத்து நாயை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதன்பின் கயிறு வாயிலாக அந்த நாயை இரண்டு பேர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்துள்ளனர்.

இக்காட்சிகளை கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவன் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இப்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா, நாய் வீடியோ காட்சிகளுடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உட்பட 2 பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |