Categories
மாநில செய்திகள்

காலி பணியிடம் நிரப்பப்படும்…. சட்டசபையில் உறுதி அளித்த வேளாண்துறை அமைச்சர்….!!!!

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கிய பிறகு முதலில் கேள்வி நேரம், கேள்வி நேரம் முடிந்த பிறகு நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தில் தமிழகம் முழுவதும் வேளாண்மை துறையில் படித்து முடித்து உள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |