ஐயப்பன் கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கிய எஸ்.பி,பியின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றன .
திரையுலகில் புகழ் பெற்ற முன்னணிப் பாடகரானஎஸ் .பி. பாலசுப்ரமணிம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார் . அவரது இறப்பிற்கு அனைத்து துறையினரும்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர் . திரைஉலகம் மட்டுமல்லாது அரசியல் தலைவர்ககள் அனைவரும் தங்களது இரங்களை தெரிவித்தனர். அதோடு எஸ்பிபி அவர்கள் கொடுத்த பேட்டிகள் அவரது கச்சேரிகள் போன்றவை இணையதளங்களில் வெளியாகி புகழ்பெற்றது.அவ்வகையில் எஸ்பிபி அவர்கள் தொழிலாளி ஒருவரின் காலில் விழுந்த காணொளியும் வெளியானது அந்தக் காணொளி சபரிமலை ஐயப்பன் கோவிலில் எடுக்கப்பட்டதாகும்.சபரிமலை . பம்பை நதியிலிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்காக டோலியில் தூக்கி செல்லும் வழக்கம் உள்ளது.
நாற்காலி போன்று இருக்கும் இந்த டோலியில் அமரவைத்து , நான்கு பேர் தூக்கி கொண்டு நடந்தே ஐயப்பன் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். எஸ்.பிபி அவர்கள் ஒரு நாள் ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற போது டோலியில், அமரும் முன்பு, தன்னைத் தூக்கிக்கொண்டு செல்லும் அனைத்துத் தொழிலாளிகளின் காலைத் தொட்டு வணங்கியுள்ளார் . பின்பு அவர் டோலியில் அமர்ந்தவுடன், தொழிலாளிகள் தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த வீடியோ பதிவு முதல் சமூக வலைதளத்தில் பலராலும் சேஷர் செய்யப்பட்டுவருகின்றன . எந்த அளவுக்கு எளிமையான மனிதராக ஸ்.பி.பி இருந்துள்ளார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர் . எஸ்.பி.பி அவரின் பாடல்களால் மட்டும் இன்றி , குணத்தாலும் கவனம் ஈர்த்த கலைஞராகத் திகழ்துள்ளார் புகழின் உச்சிக்கே சென்றுள்ளர் .
