Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்கள் நிரப்புவதில்…. அரசியல் தலையீடு இருக்காது…. அமைச்சர் உறுதி…!!!

நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.‌ பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது.

இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் நிரப்பப்படும்.

இதில் விற்பனையாளருக்கு ரூ. 8,500 மாத சம்பளமும், எடையாளருக்கு மாத சம்பளமாக ரூ. 6500 வழங்கப்படும். இவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் அடிப்படையிலேயே நியமிக்கப் படுவார்கள். மேலும் நியாய விலை கடைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசியல் தலையீடு  இருக்காது எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.

Categories

Tech |