தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஆறு, குளங்களில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தைகளை தனியாக விட வேண்டாம். வீட்டில் இருக்கும் மாணவர்கள் செல்போனில் நேரத்தை செலவு செய்யாமல், புத்தக வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமான செயல்படுங்கள்.