அரசியல் சாசன தினத்தையொட்டி, அதை நாடு முழுவதும் பரப்பும் அடிப்படையில் 12 பைக் பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணித்து தமிழகம் திரும்பியதை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரிலுள்ள தனியார் பள்ளி அரங்கில் நேற்று (நவ…27) விழா நடைபெற்றது. அதாவது, இந்த பயணத்தில் 15 தினங்களில் 6000 கி.மீ இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு 10 லட்சம் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தை எடுத்துக் கூறியதை கொண்டாடும் விழா நடைபெற்றது.
இவற்றில் சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, புது நீதிகட்சி தலைவர் ஏசி சண்முகம், வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேஷ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மேடையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, நமது நாட்டில் அரசியல் அமைப்பு சட்டம் தெரியுமா என கேட்டால் அதற்கு பதில் தெரியாது என்பதே அதிகம் கூறுவார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டி அளித்தபோது ,” தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக பேசுவதை நாம் பார்த்துள்ளோம். முதன் முறையாக பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு ராணுவ வீரரை அதுவும் ஹிமாச்சலபிரதேசத்தில், சிஆர்பிஎஃப் வீரரை மிரட்டும் அடிப்படையில் உங்களது குடும்பம் இங்கே தானே இருக்கிறது என்பதை போன்று பேசி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சட்டஒழுங்கு இங்கே உள்ளது. தமிழகம் முழுவதும் அடுத்தமுறை அரசுக்கு எதிராக 5000 இடங்களிலும் போராட்டம் நடந்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று பேசினார்.