தொடரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்க இனியும் காலம் கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நீட் தந்த மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி சேர்ந்த தம்பி சுபாஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து பெரும் துயரம் அடைந்தேன். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்த வரும் இந்த கொடும் நிகழ்வுகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தங்கை அனிதா தொடங்கி சுபாஷ் வரை நீட் என்னும் கொலைக்கருவிக்கு பலியாகும் மாணவர்களின் மரணம் தொடர்கதையாகி வருகின்றது.
எனவே இனியும் காலம் கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டு 16 மாணவர்களின் உயிர்களை பறித்த நீட் இனியும் நீடித்தால் பேராபத்து என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.