Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு: 10ல் 8 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு…. குழந்தைகள் நல மருத்துவர் தகவல்….!!!!

மோசமான காற்றின் தரத்தால் தில்லியில் 10ல் 8 குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் தெரிவித்து இருக்கிறார்.

தில்லியில் தொடர்ந்து காற்றுமாசு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று காற்றின்தரம் “மிக மோசம்” பிரிவுக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி பிரபல தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவர் கூறியிருப்பதாவது “வெளி நோயாளிகள் பிரிவில் வரும் குழந்தைகளில் 10ல் 8 பேருக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்னை உள்ளதாக கூறுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் இருமல் மற்றும் சுவாசப்பிரச்னை இருப்பதாகவும், குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறுகிறார்கள். கைக் குழந்தைகளால் இப்பிரச்னையை சொல்ல முடியாததால், பெரும் பிரச்னை ஏற்படுகிறது. அத்துடன் நச்சுவாயு மற்றும் துகள்களின் மாசு காரணமாக குழந்தைகளின் நுரையீரலானது பாதிக்கப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு சளி, இருமல் ஆகிய காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் ஆரம்பிக்கிறது. குழந்தைகள் முகக் கவசம் அணிவதுடன், அடிக்கடி கைகளை கழுவதுதான் ஒரே தீர்வு ஆகும். இருமல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து இடைவெளிவிட்டு அமரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |