காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி கல்லூரி மாணவர் டெல்லி ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைக்கும் என ஒரு பொதுவான விஷயமாகும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறிய தீர்ப்பில், கோர்ட் என்பது ஒரு முக்கியமான இடம். கோர்ட்டில் மனு தாக்கல் செய்வது அல்லது மனுத்தாக்கல் செய்வதற்கான உரிமை என்பது உங்கள் சுயவிவரம் விண்ணப்பத்துக்கானது அல்ல. அடுத்த முறை நீங்கள் ஒரு முக்கியமான பிரச்சிணையை கோர்டில் கொண்டு வர மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்.
மேலும் மாசுபாடு மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றிய பொதுவான விவகத்தை நான் கோட்டில் விவாதிக்க விரும்பவில்லை. மாசு காரணமாக உங்களுக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்பட்ட பிறகு ஏதேனும் மருத்துவ அறிக்கை, மருத்துவ சான்றுகள், உங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பரிசோதனை முடிவுகள், உங்கள் தனிப்பட்ட பாதிப்பிற்கு ஆதாரமாக கோர்டில் காட்ட வேண்டும். இதனையடுத்து மனுதாரர் தரப்பில் கூறியது, தனக்கு மூச்சு திணறல் இருப்பதாக கூறினார். மாசுபாடு காரணமாக தனிப்பட்ட பாதிப்பு 70-75 வயதான காலத்தில் மட்டுமே தெரியவரும். ஆனால் மாசுபாடு பல்வேறு நோய்களுக்கு மூலம் காரணம் என்றார். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 21வது பிரிவின் எல்லையை சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விரிவுபடுத்துள்ளது. அதன்படி மாசு இல்லாத சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமையை அடிப்படை உரிமையாக கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். அதன் பிறகு மனுதாரர் சிவம் பாண்டேவுக்கு தனிப்பட்ட பாதிப்பு எதுவும் இல்லை, மருத்துவ ஆதாரம் இல்லை என்று கூறி இந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா தள்ளுபடி செய்தார்.