காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியமென நுகர்வோர் விரும்புவதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக்குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
இந்த கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்களது போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அத்துடன் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு போன்ற 5 பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கேட்பில் சென்னையில் மட்டும் 1508 நபர்களிடம் விநியோக நிறுவனங்கள் மின்வாகனங்களுக்கு மாறும் திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது.