Categories
உலக செய்திகள்

காற்று மாசுபட்டால்…. சிறுமி உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்..!!

சிறுமியின் இறப்பிற்கு காற்று மாசுபாடும் காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி Ella adoo kissi debrah. இச்சிறுமி ஆஸ்துமா பாதிப்பால் 2013 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகை காரணம் என்று பிரிட்டனின் நீதித் துறை அலுவலர் கூறியுள்ளார்.

மேலும் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளதாவது, இச்சிறுமி மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 30 முறை சுவாச பிரச்சனையினால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் இச்சிறுமியின் உயிரிழப்புக்கு  காற்று மாசுபாடு தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்  சிறுமியின் இறப்பு சான்றிதழிலும் இந்த காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு காற்று மாசுபாட்டால் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது பிரிட்டனில் இதுவே முதல் முறையாகும். மேலும் ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் காற்று மாசுபாட்டால் 28,000 முதல் 36 ஆயிரம் வரை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லண்டன் மேயர் அலுவலகத்தில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், WHO அமைப்பு காற்று மாசுக்கு வரம்புகளை விதித்துள்ளது. ஆனால் பிரிட்டனின் தலைநகரங்களில் இது கடைபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |