Categories
உலக செய்திகள்

காற்றுடன் கைகுலுக்கிய அமெரிக்க அதிபர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காற்றுடன் கைகுலுக்கிக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வட கரோலினா ஏ&டி மாநில பல்கலைக்கழகத்தில் சுமார் 40 நிமிடம் உரையாற்றினார். இதையடுத்து தனது உரையை முடித்துக்கொண்ட ஜோ பைடன் திடீரென மேடையின் வலது பக்கம் திரும்பி யாருடனோ கைகுலுக்கிக் கொள்வது போல கையை நீட்டியுள்ளார்.

ஆனால் மேடையில் வேறு யாருமே இல்லை. அதேபோல் கூட்டத்தில் இருந்து கைதட்டி கொண்டிருந்த யாரும் அவரை அணுகி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவில்லை. இதுதொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி ஒரே நாளில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது.

Categories

Tech |