Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகள்… “கும்பலாக கூடிய மக்கள் கூட்டம்”… போலீசருக்கு கிடைத்த தகவல்…!!!!

வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கேமராவை ஆய்வு செய்தபோது காரில் வந்த நான்கு பேர் கள்ள நோட்டுகளை சாலையில் வீசியதும் காற்றில் பறந்த பல நோட்டுகளை மக்களும் காரில் சென்றவர்களும் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |