லாரி மோதியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இருந்து காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை யோகநந்தன்(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி உரசியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.