Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“கார் வாங்கிக்கோங்க” பணம் இப்போது வேண்டாம்…. மஹேந்திரா நிறுவனத்தின் புதிய சலுகை….!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு வாகன விற்பனை சரிவடைந்துள்ளது. இதனை ஈடு செய்வதற்காக மஹேந்திரா  அண்ட் மஹேந்திரா நிறுவனம் புதிய சலுகை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த சலுகையின் படி வாகனத்தின் விலை குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் பணம் வாங்காமல் வாகனத்தை விற்பனை செய்யும் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளது.

‘Own Now and Pay after 90 days’ என்ற சலுகையின் படி வாடிக்கையாளர்கள் வாகனங்களை எந்த முன்பணமும் செலுத்தாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் 90 நாட்கள் முடிவடைந்த பிறகு தவணையை செலுத்த தொடங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எந்த மாடல் காரை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையின் கீழ் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |