ஹரியானாவில் கார் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் உள்ள பகதூர்காரில் உள்ள கே.எம்.பி எக்ஸ்பிரஸ்வேயில் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காருக்கு பின்னால் வந்த மற்றொரு கார் அந்த காரின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி ஒன்றின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலியாயினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.