Categories
ஆட்டோ மொபைல்

கார், பைக் வாங்க போறிங்களா…. உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி….! ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கும் இந்த விலை….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், பைக் வாங்குபவர்கள் அதிக இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு வகையான வாகனங்களுக்கு மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக இந்த கட்டண உயர்வுகள் மீதான இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஆய்வு செய்யப்பட்டு மூன்றாம் தரப்பு காப்பீடு பிரீமியத்தை அரசாங்கம் செயல்படுகின்றது. உங்கள் வாகனம் விபத்தில் சிக்கும் பொழுது ஏற்படக் கூடிய நிதி இழப்பிற்கு மூன்றாம் நபர் காப்பீடு செய்வது கட்டாயமாகும்.

அதன்படி தனியார் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் ரூ.2094 உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டு ரூ.2,072 கோடியாக இருந்தது. மேலும், 1000சிசி முதல் 1500சிசி வரையிலான தனியார் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு ரூ.3,221ல் இருந்து ரூ.3,416 ஆக உயரும். 1500சிசிக்கு மேல் உள்ள கார்கள் அதிகபட்சமாக ரூ.7,897 செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில், 150சிசி முதல் 350சிசி வரையிலான வாகனங்களுக்கு ரூ.1,366 பிரீமியம் செலுத்த வேண்டும். 350சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பிரீமியமாக ரூ.2,804 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானால் அல்லது விபத்து ஏற்பட்டால் இந்த பாலிசியில் ஏற்படும் பாதிப்புகளுக்கு காப்பீடு நிறுவனங்கள் மூன்றாம் நபருக்கு இழப்பீடு வழங்கும். வாகன உரிமையாளர்கள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு மூன்றாம் தரப்பினர் காப்பீடு தொகையை கோரலாம். பாலிசிதாரர் விபத்து குறித்து காப்பீடு நிறுவனத்திற்கு விரைவில் தெரிவிக்க வேண்டும். மேலும் விபத்து நிலைமையை விளக்க வேண்டும். விபத்து நடந்த தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களை காப்பீடு நிறுவனங்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

Categories

Tech |