யாரடி நீ மோகினி படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கார்த்திக் அவரின் நீண்ட கால நண்பரான நடிகை அம்ருதா சீனிவாசனை இன்று திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் சில வருடங்களுக்கு முன்பு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில், பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் கார்த்திக் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான அம்ருதாவை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார். அம்ருதா தேவ் , மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories
கார்த்தி பட நடிகையை….. 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகர்….!!!
