கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்திக் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இருப்பினும் இத்திரைப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் இருப்பதால் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. மேலும் எதிர்பார்ப்புடன் படம் வெளியானதால் முதல் நாள் வசூல் அமோகமாக இருக்கின்றது.
இயக்குனர் முத்தையா திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்டதாக இருக்கும். தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்திருக்கின்றார் அதிதி. இத்திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் எமோஷனல் சென்டிமென்ட் ட்ராமாவாக இருப்பதால் படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றார்கள். குடும்ப பின்னணியில் தரமான ஆக்சன் திரைப்படமாக விருமன் திரைப்படம் இருப்பது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.