கார்த்தி, அதிதி சங்கர் நடிக்கும் விருமன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் இருந்து காந்த கண்ணழகி என்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீசாகிறது.