அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார் நடிகர் கார்த்தி. இந்த படம் 100 நாட்களைத் தாண்டி ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ் போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்கள் கார்த்தியை சினிமாவின் அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றது. இதன் பின்பு அவர் தன் படங்கள் அனைத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்து, தோழா ,தீரன் ,கடைக்குட்டி சிங்கம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்தார். கார்த்தி தற்போது அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப் படத்தில் நடித்து வருகிறார் .
அதோடு மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பேச்சிலர் என்ற திரைப்படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கார்த்தி ஒரு படம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.