சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 624 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள தந்தூரணி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்தும் காரில் இருந்த ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்த நம்புராஜ் கீழக்கரையை சேர்ந்த ஜெயராஜ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, காரில் இருந்த 624 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மதுபானம் விநியோகம் செய்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் முருகேசன், துளசி ராஜமூர்த்தி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.