Categories
மாநில செய்திகள்

காரில் திடீரென பற்றி எரிந்த தீ…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 9 பேர்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சென்னையில் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வரும் அருண்குமார், தன் உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பி இருக்கிறார். அப்போது காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர். இந்நிலையில் வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகில் தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்னதாக காரில் அடைப்பு ஏற்படுவதுபோல வண்டி நின்றுநின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் முன்பக்க பேனட்டை திறக்க சென்றார் அருண்குமார்.

ஆனால் அது திறக்கவில்லை. இதனிடையில் திடீரென இன்ஜின் இருக்கும் பகுதியிலிருந்து புகை வர துவங்கியது. சிறிது நேரத்தில் வாகனம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனிடையில் காரை நிறுத்தியதும் அருண்குமாருடன் இருந்த 2 பெண்கள் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் வாகனத்தை விட்டு இறங்கி நின்றுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பாக உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறை மற்றும் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2 வாகனங்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனம் தீ பற்றியதுக்கான காரணம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

Categories

Tech |