Categories
சினிமா

காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம்…. சிக்கலில் சிக்கிய பவன் கல்யாண்?…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

ஜனசேனா கட்சி என்பது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள ஒரு இந்திய அரசியல் கட்சி ஆகும். இவை மார்ச் 2014-ஆம் வருடம் பவன்கல்யாணால் உருவாக்கப்பட்டதாகும். ஜனசேனா என்பதற்கு தெலுங்கில் மக்கள் ராணுவம். தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆன பவன்கல்யாண் ஆந்திர மாநிலம் குண்டூரிலுள்ள இப்டாம் என்ற கிராமத்தை எவ்வாறு சென்றடைந்தார் என்ற வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், பவன்கல்யாண் தன் ஓடும் கார் மேலே அமர்ந்து இருப்பதையும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் வாகனத்தின் ஓரத்தில் தொங்குவதையும் காணலாம்.

அத்துடன் பின்னால் வந்த காரில் மேலேயும் சில பேர் அமர்ந்து பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி ஆதரவாளர்கள் சில பேர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பிரபலமாகி, அவரது ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றது. அதே சமயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது பற்றி பலர் கேள்வி எழுப்பினர். இதனிடையில் அவரது கார் மங்கல்கிரியில் போலீசாரால் தடுத்துநிறுத்தப்பட்டது. இதற்கிடையில் சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டு  வீடுகளையும், கடைகளையும் இழந்தவர்களை பவன்கல்யாண்  சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |