நம்முடைய அன்றாட உணவு பழக்கவழக்கங்களில் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது எந்த நோயுமே அண்டாது. அப்படி எடுத்துக்கொள்ள தவறும் பட்சத்தில் பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். அந்தவகையில் மஞ்சள் காமாலை குணமாக உலர்த்தப்பட்ட புதினாக் கீரை பெரிதும் உதவுகிறது. எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
முதலில் புதினா கீரையை பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும்போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.