Categories
உலக செய்திகள்

காய்ச்சல் தான் கொரோனா…. அதை கட்டுப்படுத்த போவதில்லை…. டிரம்ப் தரப்பு ஆணவ பேச்சு …!!

அமெரிக்க அதிபரின் உதவியாளர் மார்க் மேடோஸ் கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் என கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் அதிக தாக்கத்தை சந்தித்து உயிரிழப்புகளை கொடுத்துள்ளது. அதில் அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புகளும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்காவே பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பரவுவதை ட்ரம்ப் தடுக்காமல் விட்டுவிட்டார் என்று ஜோ பிடன் விமர்சனம் செய்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் அதிபரின் உதவியாளர் மார்க்கிடம் கேட்டபோது “கொரோனா சாதாரண காய்ச்சல் போன்ற ஒன்றுதான். நாங்கள் அதனை கட்டுப்படுத்த போவதில்லை” எனக் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ட்ரம்பின் உதவியாளர் கூறிய இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்  நிர்வாகத்தின் செயல்பாடுகளால் 86 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு 22,25,227 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |