Categories
மாநில செய்திகள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கட்டாயம்….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

ஆனால் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். ஆனால் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், காய்ச்சலால் தமிழகத்தில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |