ஈரோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியில் கணேசன் மற்றும் கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 25 வயதில் கீர்த்தனா என்ற மகளும், 23 வயதில் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதனையடுத்து கணேசன் சூரம்பட்டி பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் தனது தொழில் சம்பந்தமாக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தான் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் படத்தை திரும்ப கேட்டுள்ளனர்.
அதனால் மனமுடைந்த கணேசன் நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.