எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள் இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில காய்கறிகள் உடலுக்கு வலு சேர்ப்பது தவிர ஆச்சரியமான பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது, அப்படிப்பட்ட 5 காய்கறிகளை இங்கு பார்ப்போம்.
காளான்:
காளான்களில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. ஆனால் சிலருக்கு காளான் சாப்பிடுவதால் தோலில் தடிப்பு வரும். உணவில் சேர்ப்பது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். காளான்களை பச்சையாக சாப்பிடும் போது தான் இன்று பிரச்சினை ஏற்படும்.
கேரட்:
கேரட் அதிக அளவில் நாம் சாப்பிடும் போது நமது சருமம் ஆரஞ்சு நிறமாக மாறும். ஏனெனில் கேரட்டில் பீட்டா கரோட்டின் என்பது அதிகமாக உள்ளதால், நாம் அதிகமாக உட்கொள்ளும் போது இது நமக்கு இந்த பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. கேரட் மட்டுமல்ல, பூசணி , சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடுவதாலும் சருமத்தின் நிறம் மாறும்.
பீட்ரூட்:
பீட்ரூட்டை அதிகளவில் உட்கொள்ளும் போது நமது சிறுநீரின் நிறம் மாறும். பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளும் போது நமது சிறுநீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இதை கண்டு நீங்கள் பயப்பட தேவை இல்லை.
ஆரஞ்சு:
ஆரஞ்சில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நமது சிறுநீரின் நிறத்தை மாற்றக்கூடியது. ஒரே நாளில் அதிகமாக ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது நமது சிறுநீரின் தோற்றம் மாறுபடுகிறது. நமது உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போது சிறுநீரின் நிறம் மாறும். எனவே அதிக விட்டமின் சி எடுத்துக் கொள்ளும் போது ஏராளமான தண்ணீரை குடிக்கவேண்டும்.
முட்டைக்கோஸ்:
முட்டைக்கோஸ் காலிஃப்ளவர் போன்ற வகை காய்கறிகள் அதிகமாக உட்கொள்ளும் போது இரைப்பை குடல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. முட்டைக்கோஸ் ஆரோக்கியமானது என்றாலும் அதிகமாக உட்கொள்ளும் போது ஜீரணிக்க கடினமாக இருக்கும். பச்சையாக சாப்பிட்டால் அது மிகவும் தீங்கு விளைவிக்கும். நமது உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாத காய்கறிகளை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது அது நமக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.