Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காயத்துடன் சுற்றும் புலி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

காயத்துடன் சுற்றித்திரியும் புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மானந்தவாடி பகுதியில் கழுத்தில் காயத்துடன் ஒரு புலி சுற்றுகிறது. இந்த புலி கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தூக்கி செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்களின் வேண்டுகோள் படி வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் கழுத்தில் காயத்துடன் புலி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகியுள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |