Categories
சினிமா

“காமெடி நடிகர் விவேக்கின் கனவு திட்டத்தினை தொடரும் நண்பர்”…. வெளியான புகைப்படம்…..!!!!!

மறைந்த நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ.பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் அடிப்படையில் நேற்று “விவேக்’ஸ் கிரீன் கலாம்” எனும் பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் நேற்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். அப்போது தென் இந்திய நடிகர் சங்கம் துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். இந்நிலையில் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ்., நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா ஆகியோர் பங்கேற்றனர்.

 

Categories

Tech |