பவினா பட்டேல் இந்திய குஜராத் மாநிலம் மெக்சனா நகரை சேர்ந்த இணை மேசை பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் தற்போது நடைபெறும் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி சுற்றிற்கு தகுதி பெற்று தங்கம் பெரும் வாய்ப்பினை கொண்டுள்ளார். தனது சர்க்கர நாற்காலியில் இருந்து மேசை பந்தாட்டம் விளையாடும் பட்டேல் பல தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
2011 தாய்லாந்தில் நடந்த உலகளாவிய மேசை பந்தாட்ட போட்டியில் தனி நபர் வகையில் வெள்ளி பதக்கம் பெற்று உலக தரவரிசையில் இரண்டாவது இடம் பெற்றுள்ளார். மேலும் அக்டோபர் 2013-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய இணை மேசை பந்தாட்ட போட்டிகளில் நான்காம் பிரிவில் மகளிர் ஒற்றையர் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்த நிலையில் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெங்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழலில் மகளிர்க்கான ஹாக்கியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணி எதிர்கொண்டது.
இதில் 1-1 இரு அணிகளும் சமநிலை வகித்தது. இதனை அடுத்து ஷூட் அவுட் முறை நடைபெற்றது. இதில் 2-1 என்று கணக்கில் இந்தியா வென்று வெண்கல பதக்கத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 41 பதக்கங்களை பெற்றிருக்கிறது.