காமன் வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதால் தனலட்சுமி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை கேட்ட பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.