தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பொழுது உதவும் என்று பலர் மருத்துவ காப்பீடு போட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மருத்துவ காப்பீடு செய்த குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு தொகையை வழங்காமல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அலட்சியம் செய்து வருகின்றது.
நோய்களின் பட்டியலில் கொரோனா இல்லை எனக்கூறி இதுவரை 3,30,000 விண்ணப்பங்கள் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 10,603 கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக காப்பீடு செய்த குடும்பங்கள் சிகிச்சைக்கு பணம் கிடைக்காமல் கடனில் தத்தளித்து வருகின்றனர்.